எல்லையில் ஊடுருவ தீவிரவாதிகள் முயற்சி: துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் பலி

எல்லையில் ஊடுருவ தீவிரவாதிகள் முயற்சி: துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் பலி
Updated on
1 min read

காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி வழியாக ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். மேலும் ஒரு வீரர் படுகாயமடைந்தார்.

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் கேரன் பகுதியில், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி வழியாக ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுடன் ராணுவத்தினர் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் பலியாகினர்.

கடந்த 20 நாட்களாகவே எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்று வருகின்றனர். தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் முயற்சியில் ராணுவத்தினர் மேற்கொண்டுள்ள சண்டையில் இதுவரை தீவிரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in