Published : 23 Jul 2024 05:13 AM
Last Updated : 23 Jul 2024 05:13 AM

எதிர்பாராத வகையில் உயிரிழந்தால் சபரிமலை பக்தர்களுக்கு ரூ.10-க்கு ரூ.5 லட்சம் ஆயுள் காப்பீடு

பத்தனம்திட்டா: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது.இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும்மண்டல மற்றும் மகர விளக்குபூஜை காலத்தில் ஏராளமான பக்தர்கள் யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த யாத்திரையின்போதுவிபத்து, உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் சிலர் உயிரிழக்கின்றனர். இதையடுத்து பக்தர்களுக்கு ஆயுள் காப்பீடு வழங்கதிட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐயப்பன் கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவசம் வாரிய (டிடிபி) தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறியதாவது:

சபரிமலைக்கு வரும் பக்தர்கள்தரிசனத்துக்காக இணையவழியில் முன்பதிவு செய்யும்போதே ரூ.10(ஒரு முறை பிரீமியம்) கூடுதலாக செலுத்தி காப்பீடு பெற்றுக் கொள்ளும் வசதியைஅறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இது வரும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்கான யாத்திரையின்போது அமலுக்கு வரும்.

இந்த திட்டத்தில் காப்பீடு செய்தவர்கள் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தால், அவருடைய குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம்காப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு எவ்வளவு நிவாரணம் வழங்குவது என்பதுகுறித்து பின்னர் அறிவிக்கப்படும். இந்த திட்டத்தை பொதுத் துறையைச் சேர்ந்த காப்பீட்டுநிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த விரும்புவோரிடமிருந்து டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதற்காக 4 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

சத்திரம்-புள்ளமேடு வழித்தடம் மற்றும் எருமேலி மலைப் பாதைஉட்பட அனைத்து யாத்திரை பகுதியிலும் பாதிக்கப்படுவோருக்கு இந்த காப்பீடு பொருந்தும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசனில் 53 பக்தர்கள் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் மாரடைப்பு மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக உயிரிழந்தனர்.

பக்தர்களுக்காக டிடிபி சார்பில் இப்போது அமலில் உள்ள காப்பீட்டு திட்டத்தின் கீழ் சாலை விபத்தில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம்வழங்கப்படுகிறது. ஆனால், உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்போருக்கு ஆம்புலன்ஸ் கட்டணமாக வெறும் ரூ.30 ஆயிரம் (வெளி மாநிலத்தவருக்கு ரூ.50 ஆயிரம்) மட்டுமே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x