

இந்திய எல்லைப் பகுதியில் கடந்த 37 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. இது இந்த மாதத்தில் நடைபெறும் இரண்டாவது தாக்குதல் சம்பவமாகும்.
இதுகுறித்து ராணுவ செய்தித்தொடர்பாளார் மணிஷ் மேத்தா கூறியதாவது:
பூஞ்ச் மாவட்டத்தில் மேதர் என் கிற இடத்தில் இந்தியப் படைகள் அமைத்துள்ள முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இதனால் எந்த ஓர் உயிருக்கோ அல்லது உடைமைக்கோ சேதம் ஏற்படவில்லை.
இந்த மாதத்தில் தனது போர் நிறுத்தத்தை மூன்றாவது முறை யாக பாகிஸ்தான் மீறியுள்ளது. பாகிஸ்தான் வீரர்களிடத்தில் சிக்கிய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிருடன் மீண்டும் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் திரும்ப வந்ததற்குப் பிறகு 37 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படை உயரதிகாரிகளும் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது இரு நாட்டு எல்லையில் அமைதி நிலவச் செய்ய தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்வது பற்றி இருதரப்பிலும் விவாதித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை 32 முறை போர் நிறுத் தத்தை மீறியுள்ளது பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.