Published : 16 May 2018 08:31 AM
Last Updated : 16 May 2018 08:31 AM

டெல்லியில் பாஜக தொண்டர்கள் கொண்டாட்டம்

கர்நாடக தேர்தல் வெற்றியை டெல்லியில் பாஜக தொண்டர்கள் நேற்று கொண்டாடினர்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். பலர், காவி மற்றும் பச்சை நிற உடை அணிந்திருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரின் பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.

கர்நாடகாவில் பாஜக முன்னிலை பெறும் தகவல் வெளியானதும் பிரதமர் மோடியை வாழ்த்தி முழக்கம் எழுப்பினர். பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கர்நாடக தேர்தல் வெற்றியை கொண்டாடினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x