கேரள அரசின் வெளியுறவுத் துறை செயலாளராக வாசுகி நியமனம்: பாஜக எதிர்ப்பு

கேரள அரசின் வெளியுறவுத் துறை செயலாளராக வாசுகி நியமனம்: பாஜக எதிர்ப்பு
Updated on
1 min read

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 15-ம் தேதி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளராக உள்ள கே.வாசுகி, வெளியுறவு விவகாரங்கள் துறையை கூடுதலாக கவனிப்பார் என்று மாநில அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த விவகாரத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை வாசுகிக்கு பொது நிர்வாக (அரசியல்) துறை உதவும். மேலும் டெல்லியில் உள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுடன் வாசுகி தொடர்பு கொள்வதற்கு டெல்லி கேரள இல்லத்தின் ஆணையர் உதவ வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

வெளியுறவு விவகாரம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், கேரள அரசின் இந்த நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கேரள பாஜக தலைவர் கே.சுரேந்திரன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “கேரளாவில் ஐஏஎஸ் அதிகாரியை வெளியுறவு செயலாளராக நியமித்திருக்கும் முதல்வர் பினராயி விஜயனின் செயல் அரசியல் சாசனத்தை மீறும் வகையில் உள்ளது.

கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்கு வெளியுறவு விவகாரங்களை கவனிக்க அதிகாரம் இல்லை. அரசியல் சாசனத்துக்கு முரணான இந்த நடவடிக்கை ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவை தனி நாடாக மாற்ற முதல்வர் பினராயி விஜயன் முயற்சிக்கிறாரா?” என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in