

கர்நாடகம், குஜராத், கோவா, மகாராஷ்டிரம் ஆகிய 4 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநில ஆளுநராக கல்யாண் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பாஜக மூத்த தலைவரும், உத்திரப்பிரதேச மாநிலம் முன்னாள் முதல்வரும் ஆவார்.
குஜராத் சட்டமன்ற சபாநாயகராக இருந்த வஜூபாய் ருதாபாய் வாலா கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநில ஆளுநராக வித்யாசாகர் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வாஜ்பாஜ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். தற்போது, தெலங்கானா பாஜகவில் உள்ளார்.
கோவா மாநில ஆளுநராக பாஜக மகளிர் அணி தலைவராக இருந்த மிருதுளா சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனங்கள் தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.