

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பியான, ஸ்வாதி மலிவாலை, கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தாக்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, பிபவ்குமார் கடந்த மே18-ல் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், தன்மீதான விசாரணை முடிந்துவிட்டதால் இனி தன்னை காவலில் வைக்கத் தேவையில்லை என்றும் கூறி பிபவ் குமார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அனூப்குமார் மெந்திரட்டா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தவழக்கில் ஜாமீன் வழங்குவதற்கான எந்தக் காரணமும் இல்லைஎன்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.