Published : 29 May 2018 06:38 AM
Last Updated : 29 May 2018 06:38 AM

சுனந்தா புஷ்கர் மரண வழக்கு; சசிதரூர் மீதான புகாரைநிரூபிக்க ஆதாரம் உள்ளது: அரசு வழக்கறிஞர் வாதம்

காங்கிரஸ் எம்.பி. சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் 2014 ஜனவரி 17-ம் தேதி, டெல்லி ஹோட்டலில் இறந்து கிடந்தார். இந்த வழக்கில், சசிதரூக்கு எதிராக டெல்லி போலீஸார் கடந்த 14-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் சுனந்தாவை கொடுமைப்படுத்தியதாகவும் அவரை தற்கொலைக்கு தூண்டியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். 300 பக்கங்கள் கொண்ட அந்த குற்றப்பத்திரிகையில் சசிதரூர் மீது மட்டுமே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தம்பதியின் வீட்டுப் பணியாளர் நாராயண் சிங் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு கூடுதல் முதன்மை பெருநகர நீதிபதி சமீர் விஷால் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, சசிதரூர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளன” என்றார். மரணத்துக்கு காரணம் என்னவென்று நீதிபதி கேட்டபோது, “விஷம் உட்கொண்டதே காரணம். இது தொடர் விசாரணையில் உள்ளது” என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, குற்றபத்திரிகையை ஏற்றுக்கொண்டு சசிதரூக்கு சம்மன் அனுப்புவது தொடர்பான முடிவை ஜூன் 5-ம் தேதி அறிவிப்பதாக நீதிபதி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x