

ராணுவம் மற்றும் விமானப் படைக்கு ரூ.6000 கோடியில் 197 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான டென்டரை மத்திய பாதுகாப்புத் துறை வெள்ளிக்கிழமை ரத்து செய்தது.
அதேநேரம் நீர்மூழ்கி கப்பல்கள், அர்ஜுன் டாங்கிகளை கொள்முதல் செய்ய ரூ.17,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சில் கூட்டம் டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக ரூ.6000 கோடி ஹெலிகாப்டர் டென்டரை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது.
மேலும் ரூ.4800 கோடியில் நீர்மூழ்கி கப்பல்கள், ரூ.6600 கோடியில் அர்ஜுன் டாங்கிகளை வாங்குவது உட்பட ரூ.17,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.