Last Updated : 12 May, 2018 07:15 AM

 

Published : 12 May 2018 07:15 AM
Last Updated : 12 May 2018 07:15 AM

கர்நாடகாவில் இன்று வாக்குப்பதிவு: காங்கிரஸ், பாஜக, மஜத கட்சிகளுக்கிடையே கடும் போட்டி; களத்தில் 2,622 வேட்பாளர்கள்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர் தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரேகட்டமாக நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய பிரதான கட்சிகள் நேருக்குநேர் மோதுகின்றன. மாநிலம் முழுவதும் 1.4 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இரு தொகுதி தவிர மற்ற 222 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பெங்களூருவில் உள்ள‌ ஜெயநகர் தொகுதியின் பாஜக வேட்பாளர் விஜய்குமார் அண்மையில் காலமானதாலும் ராஜராஜேஸ்வரி தொகுதியில் போலி வாக்காளர் அட்டை சிக்கியதாலும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாஜக, காங்கிரஸ் தலா 222 தொகுதிகளிலும் மஜத - பகுஜன் சமாஜ் கூட்டணி 219 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி, இந்திய குடியரசு கட்சி, அதிமுக, எம்இபி, சுயேச்சைகள் உட்பட மொத்தமுள்ள 222 தொகுதிகளில் 2622 வேட்பாளர்கள் போட்டியிடுகின் றனர்.

முதல்வர் சித்தராமையா சாமுண்டீஸ்வரி, பாதாமி ஆகிய இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஷ்வர் கொரட்டகெரெ தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மஜத முதல்வர் வேட்பாளர் குமாரசாமி சென்னபட்னா, ராம்நகர் ஆகிய இரு தொகுதிகளிலும் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஷிகாரிபுரா தொகுதியிலும் களமிறங்கியுள்ள‌னர். காங்கிரஸ் (1), மஜத (1), இந்திய குடியரசு கட்சி (4), அதிமுக (4), ஆம் ஆத்மி (2) உள்ளிட்ட கட்சிகள் சார்பாக 30-க் கும் மேற்பட்ட தமிழர்களும் கள மிறங்கியுள்ளனர்.

2019 தேர்தல் முன்னோட்டம்

கர்நாடக தேர்தல் வருகிற 2019 மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுவதால் காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட கட்சிகள் கடந்த நவம்பரிலே பிரச்சாரத்தை தொடங்கின. காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய த‌லை வர் ராகுல் காந்தி, முதல்வர் சித்தராமையா, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரத மர் மன்மோகன் சிங் உள்ளிட் டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட் டனர்.

ராகுல் காந்தி கடந்த ஜனவரி முதல் கர்நாடகாவில் 30 மாவட்டங்களிலும் பல கட்டங்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த சோனியா காந்தி 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கடந்த 2 மாதங்களாக கர்நாடகாவில் தங்கியிருந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். கடந்த மே 1-ம் தேதி தீவிர பிரச்சாரத்தை தொடங்கிய பிரதமர் நரேந்திர‌ மோடி 6 நாட்களில் 25 பொதுக்கூட்டங்களில் பேசினார்.

மஜத வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசியத் தலைவர் தேவகவுடா, முதல்வர் வேட்பாளர் குமாரசாமி ஆகி யோர் தீவிர பிரச்சாரம் செய்தனர். மஜத-வுடன் கூட்டணி அமைத்திருப்பதால் பகுஜன் சமாஜ் கட்சி யின் தேசிய தலைவர் மாயாவதி, எம்பி அசாதீன் ஓவைசி ஆகி யோர் பேரணிகளில் பங்கேற்றனர். கர்நாடக தமிழர்களின் வாக்குகளை பெறும்வகையில் தமிழக காங்கிரஸ், பாஜக, அதிமுக தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடு பட்டனர்.

1.4 லட்சம் போலீஸார்

கர்நாடகாவில் உள்ள 222 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 5 கோடியே 6 லட்சத்து 90,538 பேர் வாக்களிக்கின்றனர். இதற்காக 58,302 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்களித்த பின் னர் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்து கொள் ளும் வகையில், ஒப்புகைச் சீட்டு வழங்கும் வசதியும் செய்யப்பட் டுள்ளது.

வாக்குசாவடியை சுற்றி 500 மீட் டர் தூரத்துக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அதேபோல அனைத்து வாக்குசாவடிகளும் சிசிடிவி கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. பெங்களூரு, மங்களூரு, பெல்லாரி உள்ளிட்ட மாவட்டங்களில் 12 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் அமைதியாக நடக்கும் வகையில் 82 ஆயிரம் கர்நாடக‌ போலீஸார், 585 மத்திய ரிசர்வ் படை உட்பட மொத்தமாக 1.4 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் 3 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடப்பட்டன. கர்நாடகாவில் இன்று பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மழையால் வாக்குப்பதிவு பாதிக்கப்படாத வகையில் தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யும் எடுத்துள்ளது.

வாக்குப்பதிவின்போது முறைகேடுகளை தடுக்க அங்கு, 10 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் பணியில் தேர்தல் பறக் கும் படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதுவரை ரூ.166 கோடி மதிப்புள்ள பணம், தங்கம், மின்சாதன பொருட்கள், மது உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 1229 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே பெங்களூரு, கோலார், பெல்லாரி, மைசூரு உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு சில இடங்க ளில் ஆன் லைன் மூலமாகவும் டோக்கன் மூலம் பரிசு பொருட் கள் வழங்குவதாகவும் புகார் பதிவாகியுள்ளது. பணப்பட்டுவாடா காரணமாக கர்நாடகாவில் பெரும்பான்மையான ஏடிஎம் மையங்களில் பண தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மே 15-ல் வாக்கு எண்ணிக்கை

மின்னணு வாக்கு இயந்திரங்களில் இன்று பதிவாகும் வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் கட்டுப்பாட்டு அறைகளில் பாதுகாக்கப்படும். வருகிற மே 15-ம் தேதி காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, முடிவுகள் அறிவிக்கப்படும். பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை கைப்பற்றும் கட்சி ஆட்சி அமைக் கும். சித்தராமையா, எடியூரப்பா, குமாரசாமி இவர்களில் யார் அடுத்த முதல்வராக பொறுப்பேற் பார் என்ற கேள்வி நாடு முழுவதும் எழுந்துள்ளது. எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு சட்டப்பேரவை அமையும் சூழலும் இருப்பதாக கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x