

புதுடெல்லி: மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசும்போது, “மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை (இவிஎம்)-நேற்றுநான் நம்பவில்லை. இன்றும் நம்பவில்லை. உ.பி.யில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளிலும் நாங்கள் வென்றாலும் இவிஎம்-களை நான் நம்ப மாட்டேன்.
இது எப்பொழுதும் ஒரு பிரச்சினையாகவே இருக்கும். இந்த விவகாரத்தில் நாங்கள் பிடிவாதமாக இருப்போம். இவிஎம் மூலம் நாங்கள் வெற்றி பெற்றாலும் அதனை நாங்கள் அகற்றுவோம். இவிஎம் பயன்பாடு நிறுத்தப்படும் வரை இப்பிரச்சி னையை தீர்க்கமுடியாது. அதனை அகற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.
இவிஎம்-களில் முறைகேடுகள் செய்யவாய்ப்பு இருப்பதாக கூறி இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் தேர்தல் ஆணையத்தின் விளக் கத்தை ஏற்று இவிஎம் நம்பக மானது எனஉச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவிஎம்-களில் பதி வாகும் வாக்குகளின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த விவிபாட் ஒப்புகைசீட்டுகளை முழுவதும் எண்ண வேண்டும்என்ற கோரிக்கையையும் நிராகரித்தது.