Published : 02 Jul 2024 06:29 AM
Last Updated : 02 Jul 2024 06:29 AM

அனைத்து விதமான சவால்களையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார்: தளபதி உபேந்திர திவேதி அறிவிப்பு

புதுடெல்லி: அனைத்து விதமான சவால்களையும் எதிர்கொள்ள இந்திய ராணு வம் தயாராக உள்ளது என்று ராணுவத் தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.

ராணுவத்தின் தளபதியாக இருந்த மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் செய்தியாளர் களிடம் நேற்று அவர் கூறியதாவது: நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் ராணுவம் சமரசம் செய்து கொள்ளாது. நாட்டுக்கு எதிராக எழும் அனைத்து விதமான சவால்களையும், எதிர்கால சவால்களையும் சந்திக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது. அந்த சவால்களைச் சமாளிக்கும் அளவுக்கு இந்தியாவிடம் படைத் திறன் உள்ளது.

இந்திய ராணுவத்தை வழி நடத்தும் மிகப்பெரிய வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இது எனக்கு பெருமை அளிக்கிறது. இந்திய ராணுவத்தின் பெருமை மிக்க பாரம்பரியம், நமது ராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் பங்களிப்பு பெரியது. பணியில் ஈடுபட்டிருந்தபோது, உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

நவீன ஆயுதங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பத்துடன் பாது காப்பு படை வீரர்களுக்கு ஆயுதம் வழங்குவதன் மூலம் போர் முறைகளையும், உத்திகளையும் மேம்படுத்த வேண்டும். இந்திய ராணுவம் நவீனமயமாக்கல் பாதையில் மிகச்சிறப்பான முறையில் முன்னேறி வருகிறது. இந்திய ராணுவம் திறமையான முறையில் செயல்படுகிறது.

அனைத்து விதமான சவால் களையும் சமாளிக்கும் திறன் நம்மிடையே உள்ளது.

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சிஅடைந்த தேசத்தை கட்டியெழுப்புவதில், நாம் ஒரு முக்கிய தூணாக மாற முடியும். இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முயற்சிப்பேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 19-ம் தேதிராணுவ துணைத் தளபதியாக உபேந்திர திவேதி பொறுப் பேற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x