இந்தியா - இலங்கை அதிகாரிகள் 29-ம் தேதி டெல்லியில் பேச்சுவார்த்தை: மீனவர் பிரச்சினையில் சுமுகத் தீர்வு காண நடவடிக்கை

இந்தியா - இலங்கை அதிகாரிகள் 29-ம் தேதி டெல்லியில் பேச்சுவார்த்தை: மீனவர் பிரச்சினையில் சுமுகத் தீர்வு காண நடவடிக்கை
Updated on
1 min read

கொழும்பில் இந்தியா - இலங்கை மீனவர் கள் இடையே நடந்த இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை தோல்வியடைந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி டெல்லியில் இருநாட்டு அதிகாரிகள் நிலையில் மீனவர் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

கடந்த மே 12-ம் தேதி கொழும்பில் நடந்த பேச்சுவார்த்தையில், தமிழக விசைப் படகு மீனவர்கள் தடை செய்யப்பட்ட வாருதல் (trawling) மீன்பிடி மற்றும் இரட்டைமடி மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி, இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என இலங்கை மீனவப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

ஆனால் இந்த மீன்பிடி முறையை மாற்றிக்கொள்ள 3 ஆண்டு அவகாசம் வேண்டும் எனவும், இலங்கை கடற் பரப்பில் ஆண்டுக்கு 120 நாட்களுக்கு மீன்பிடிப்பதற்கு பதிலாக 90 நாட்களாக குறைத்துக் கொள்கிறோம் எனவும் தமிழக மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், இதை ஏற்க இலங்கை பிரதிநிதி கள் மறுத்து விட்டனர். மேலும், தமிழக மீன வர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை அழித்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், இலங்கை கடற்தொழில் அமைச்சக செய்தி தொடர்பாளர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், “இந்தியா, இலங்கை மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வுத் திட்டம் ஒன்றை ஏற்படுத்த, இரு நாட்டு மீன்பிடி பிரதிநிதிகளுடன் கலந்துரை யாடி தீர்மானமொன்று பெறுவதற்கு முன்னதாக, இருநாட்டு அதிகாரிகள் நிலையிலான பேச்சுவார்த்தையை நடத்த தீர்மானித்துள்ளோம். இந்தப் பேச்சுவார்த்தை டெல்லியில் ஆகஸ்ட் 29-ம் தேதி நடைபெறும். இதில் இந்தியா-இலங்கை அதிகாரிகள் கலந்துகொள்வர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னர், இலங்கையில் இருந்து தமிழக மீனவர் களின் 62 விசைப்படகுகளும் விடுவிக்கப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in