எதிர்க்கட்சி எம்.பி.க்களால் அவையில் அச்சம்: கங்கனா ரனாவத் கருத்து

எதிர்க்கட்சி எம்.பி.க்களால் அவையில் அச்சம்: கங்கனா ரனாவத் கருத்து
Updated on
1 min read

புதுடெல்லி: இமாச்சல பிரதேசத்தின் மண்டி மக்களவைத் தொகுதியில் இருந்து பாஜக எம்பியாக தேர்வுசெய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் முதல்முறையாக மக்களவை நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளார். மக்களவையில் நேற்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

சாலை, தெருவில் சண்டையிடுவது போன்று மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் செயல்படுகின்றனர். அவர்களது நடவடிக்கைகள் அச்சுறுத்தும் வகையில் உள்ளன. அவையில் அவ்வப்போது அடிக்க வருவது போன்று பாய்கின்றனர். அவைத் தலைவர் உட்பட யாருடைய அறிவுரையையும் கேட்க அவர்கள் தயாராக இல்லை.

இவ்வாறு கங்கனா ரனாவத் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in