கர்நாடகாவில் 7-ம் வகுப்பு புத்தகத்தில் தமன்னா பற்றிய பாடம்: மாணவர்களின் பெற்றோர் கடும் எதிர்ப்பு

கர்நாடகாவில் 7-ம் வகுப்பு புத்தகத்தில் தமன்னா பற்றிய பாடம்: மாணவர்களின் பெற்றோர் கடும் எதிர்ப்பு
Updated on
1 min read

பெங்களூரு: பெங்களூரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு பாட புத்தகத்தில் நடிகைதமன்னா பற்றிய பாடம் இடம்பெற்றதற்கு மாணவர்களின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவில் உள்ள ஹெப்பாலில் சிந்தி உயர்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. இங்கு 7-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பாட புத்தகத்தில் சிந்தி மொழி பேசும் மக்களின்கலாச்சாரத்தை விளக்கும் வகையிலான பாடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இந்தி நடிகர் ரன்வீர்சிங், நடிகை தமன்னா ஆகியோர் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர், தமன்னாபற்றிய பாடம் தொடர்பாக பள்ளியின்வாட்ஸ் அப் குழுவில் கேள்வி எழுப்பினர். அதற்கு முறையான பதில் கிடைக்காததால், பள்ளியின்தாளாளரை சந்தித்து விளக்கம் கேட்டனர். அதற்கு பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை பெற்றோர் ஏற்க மறுத்தனர்.

இதனால் அதிருப்தி அடைந்தபெற்றோர் கர்நாடக பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகத்தில் புகார் அளித்தனர். அதில், “சம்பந்தப்பட்ட பாடம்மாணவர்களின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் இருப்பதால், அதனை நீக்க வேண்டும்” என கோரியுள்ளனர். இந்நிலையில் சில பெற்றோர், தமன்னாபற்றிய பாடத்தை நீக்காவிட்டால் அந்தப் பள்ளியில் இருந்துதங்களது குழந்தைகளை வேறுபள்ளிக்கு மாற்றி விடுவதாக எச்சரித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in