போக்சோ வழக்கில் எடியூரப்பாவுக்கு எதிராக 750 பக்க குற்றப்பத்திரிகை

போக்சோ வழக்கில் எடியூரப்பாவுக்கு எதிராக 750 பக்க குற்றப்பத்திரிகை
Updated on
1 min read

பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த 54 வயது பெண் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி கர்நாடக‌ முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக சதாசிவநகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், “பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான எனது 17 வயதுமகளுக்கு உதவி செய்யுமாறு எடியூரப்பாவிடம் கேட்டேன். அப்போது அவர் என் மகளை தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார்” என குறிப்பிட்ட அவர், இதற்குஆதாரமாக வீடியோ, ஆடியோ பதிவுகளையும் சமர்ப்பித்தார்.

இதையடுத்து, போலீஸார்கடந்த மார்ச் 14-ம் தேதி எடியூரப்பாமீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், புகார் அளித்த பெண் கடந்த மே 25-ம் தேதி திடீரென உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தார் குற்றம்சாட்டியதால் சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்கை விசாரிக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் போலீஸார் 750 பக்ககுற்றப்பத்திரிகையை தாக்கல்செய்தனர். அதில் முதல் குற்றவாளியாக‌ எடியூரப்பாவும், அடுத்தடுத்தகுற்றவாளிகளாக அவரது உதவியாளர்கள் அருண், ருத்ரேஷ், மாரிசுவாமி ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இத்துடன் 74 சாட்சிகளின் பெயர்களையும் வழக்கில் இணைத்துள்ளனர். மேலும் போலீஸார் எடியூரப்பா செய்த குற்றத்தை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், அவரது உதவியாளர்கள் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளதாக சிஐடி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in