ராமர் கோயில் இறுதி பணி 2025 மார்ச்சில் முடியும்: நிருபேந்திர மிஸ்ரா தகவல்

ராமர் கோயில் இறுதி பணி 2025 மார்ச்சில் முடியும்: நிருபேந்திர மிஸ்ரா தகவல்
Updated on
1 min read

அயோத்தி: அயோத்தியில் பிரம்மாண்ட ராமர்கோயில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோயிலின் தரைத்தள கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மூலவரான குழந்தை ராமரின் சிலை கருவறையில் கடந்தஜனவரியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது தொடர்பான பிராணபிரதிஷ்டை விழா கடந்த ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.

இந்நிலையில் ராமர் கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறியதாவது: கோயிலின் முதல் தள கட்டுமானப் பணி அடுத்த மாதம் நிறைவுபெறும். இதையடுத்து இரண்டாவது தளத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, இந்தஆண்டு டிசம்பருக்குள் முடிக்கப்படும். கோயில் வளாகத்தின் ஒட்டுமொத்த கட்டுமானப் பணிகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு நிருபேந்திர மிஸ்ரா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in