

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டம், கந்தோ பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் நேற்று காலையில் அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராணுவம் மற்றும் போலீஸார் மீதான சமீபத்திய தாக்குதல்களில் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. சம்பவ இடத்திலிருந்து பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலை அடுத்துகடந்த வாரம் தோடா, ரஜவுரி மற்றும் பூஞ்ச் பகுதிகளில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.