ஸ்ரீநகர் ‘உலக கைவினை நகரம்’ - உலக கைவினை கழகம் அங்கீகாரம்

ஸ்ரீநகர் ‘உலக கைவினை நகரம்’ - உலக கைவினை கழகம் அங்கீகாரம்
Updated on
1 min read

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தலைநகரமான ஸ்ரீநகர், ‘உலக கைவினை நகரம்’ என்று அங்கீகரிக்கப்படுவதாக உலக கைவினை கழகம் அறிவித் துள்ளது. இதுகுறித்து உலக கைவினை கழக செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:

ஸ்ரீநகரின் செழுமையான பாரம் பரியத்துக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் இது. இங்குள்ள கைவினைஞர்களின் கலைத்திறனுக்கும் அர்ப்பணிப்புக்கும் உலகளாவிய பாராட்டு கிடைத்திருக்கிறது. ‘உலக கைவினை நகரம்’ என்ற அங்கீகாரம், கைத்தறி மற்றும் கைவினைத் துறை மென்மேலும் வளரவும் நீடித்திருக்கவும், புதுமையான கண்டுபிடிப்புகள் நிகழவும் ஊக்குவிக்கும்.

இந்த துறையை நோக்கி அதிகஅளவில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்கவும், புதிய சந்தை வாய்ப்புகள் உருவாகவும், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படவும் துணைபுரியும். முக்கியமாக பாரம்பரியமுறைகளை பாதுகாக்கும் அதேவேளையில் நவீன நுட்பங்களையும் அறிமுகப்படுத்தும். ஸ்ரீநகரின் தனித்துவமான கைவினைப்பொருட்களுக்கான தேவைஅதிகரித்து உற்பத்தியும் அதிகரிக்கும். இது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். கைவினைஞர்கள், அவர்களது குடும்பங் களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும். ஸ்ரீநகரில் சுற்றுலா துறையும் கணிசமான வளர்ச்சி காணும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திறமைக்கு சான்று: ஜம்மு காஷ்மீர் துணைநிலைஆளுநர் மனோஜ் சின்ஹா கூறியதாவது: கைவினைஞர்களின் கடினஉழைப்புக்கும் அபாரமான திறமைக்கும் சான்று இந்த அங்கீகாரம். எங்கள் கைவினைஞர்களை நாங்கள் மனமுவந்து ஆதரித்து வருகிறோம். மேலும் இந்த பாராட்டு கைவினைஞர்களின் சமூகத்திற்கு நன்மை பயக்கும் விதமாக மாற்றப்படும் என்றும் உறுதி அளிக் கிறோம். ஜம்மு காஷ்மீரின் கைவினை மற்றும் கைத்தறி துறைக்கு பிரதமர் நரேந்திர மோடி சமரசமின்றி ஆதரவளித்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in