Published : 25 Jun 2024 06:19 AM
Last Updated : 25 Jun 2024 06:19 AM
புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்டில் (ஐஐஎம்) படிக்கும் இளம் மாணவி ராஷி பாண்டே. இவர் அண்மையில் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவி. எங்களுக்கு சொந்த வீடோ, நிலமோ கிடையாது. நான் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறேன். அண்மையில் நான் எழுதிய கல்லூரி நுழைவுத் தேர்வில் (கல்லூரியின் பெயரை குறிப்பிடவில்லை) 97 சதவீத மதிப்பெண்களைப் பெற்றேன். இருந்தபோதும் கல்லூரியில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. ஏனென்றால் நான் பொதுப் பிரிவைச் சேர்ந்தவள். அதே நேரத்தில் என்னுடைய வகுப்பைச் சேர்ந்த சக மாணவன் 60 சதவீத மதிப்பெண்களை மட்டுமே பெற்றார். ஆனால் அவருக்கு கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. அவர் வசதி படைத்த குடும்பத்தில் இருந்து வந்தவர்.
நானோ ஏழை. போதிய மதிப்பெண்கள் இருந்தும் இடம் கிடைக்கவில்லை. இடஒதுக்கீட்டால் எனக்கு என்ன நன்மை நேர்ந்துவிட்டது. ஒன்றுமே நடக்கவில்லை. எனக்கு ஒன்றும் புரியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த பதிவு தற்போது வைரலாகியுள்ளது. இதுவரை அந்தப் பதிவை 7,75,000 பேர் லைக் செய்துள்ளனர். பலர் அதை பல்வேறு சமூக வலைதளங்களில் ஷேர் செய்தும் உள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் இடஒதுக்கீட்டு முறை நிச்சயம் பலன் அளிக்கிறதா என்ற விவாதத்தையும் பலர், ராஷி கன்னாவின் கருத்தைக் கூறி எழுப்பியுள்ளனர்.
சிலர் இடஒதுக்கீடு முறை சரிதான் என்றும், சிலர் சரியில்லை என்றும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மற்றொருவர் கருத்து கூறும் போது, “இந்த இடஒதுக்கீடு முறை மிகவும் ஏமாற்றமளிக்கிறது. இடஒதுக்கீடு என்பது சாதியின் அடிப்படையில் அல்ல, நிதி நிலையின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT