அலுவலகத்துக்கு தாமதமாக வந்ததால் ரூ.1,000 அபராதம் செலுத்திய நிறுவன தலைவர்

அலுவலகத்துக்கு தாமதமாக வந்ததால் ரூ.1,000 அபராதம் செலுத்திய நிறுவன தலைவர்
Updated on
1 min read

மும்பை: மும்பையைச் சேர்ந்த எவர் பியூட்டி நிறுவனத்தின் நிறுவனர் கவுஷல் ஷா. இவர் தன் நிறுவனத்துக்கு ஊழியர்கள் தாமதமாக வருவதைத்தடுக்க புதிய விதிமுறையைக் கொண்டு வந்தார். அதன்படி, ஊழியர்கள் சரியாக காலை 9.30 மணிக்கு அலுவலகம் வந்துவிட வேண்டும். தாமதமாக வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நிறுவனர் கவுஷல் ஷாவே அலுவலகத்துக்கு 5 முறை தாமதமாக வந்துள்ளார். இதையடுத்து அவர் ரூ.1,000 அபராதம் செலுத்தினார்.

இது குறித்து அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார். “அலுவலகத்தில் ஊழியர்களின் செயல்பாட்டை அதிகரிக்க கடந்த வாரம் புதிய நடைமுறையைக் கொண்டு வந்தேன். காலை 9.30 மணிக்கு தாமதமாக வரும் ஊழியர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தேன். இறுதியில், 5 முறை தாமதமாக வந்ததால் நானே ரூ.1,000 அபராதம் செலுத்தும்படியாகிவிட்டது. நிறுவனத்தின் தலைவராக ஊழியர்களுக்கு நீங்கள் ஒரு விதியை கொண்டுவருகிறீர்கள் என்றால், முதலில் அந்த விதியை நீங்கள் கடைபிடிப்பது அவசியம்” என்று பதிவிட்டுள்ளார்.

அவரது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in