Published : 20 Jun 2024 05:47 AM
Last Updated : 20 Jun 2024 05:47 AM
பாட்னா: பிஹாரில் நீட் வினாத் தாள் கசிந்தது தொடர்பாக அம்மாநில பொருளாதார குற்றப் பிரிவின் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. பிஹார் துணை முதல்வர் விஜய்குமார் சின்ஹா நேற்று கூறிய தாவது:
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் பிஹார் அரசு விருந்தினர் இல்லத்தில் இருந்துகைது செய்யப்பட்டவர்களுக்கும் பிரீத்தம் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோல பிரீத்தமுக்கும் முன்னாள் துணை முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள(ஆர்ஜேடி) மூத்த தலைவருமான தேஜஸ்வி யாதவுக்கும் தொடர்பு இருந்துள்ளது. இதுதொடர்பான முழு விவரத்தையும்சேகரித்து வருகிறோம். இதுகுறித்து ஆய்வு செய்து தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT