ஆந்திர சட்டப்பேரவை கூட்டம் 21-ம் தேதி தொடக்கம்

ஆந்திர சட்டப்பேரவை கூட்டம் 21-ம் தேதி தொடக்கம்
Updated on
1 min read

அமராவதி: ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்ற பின், ஆந்திர மாநில சட்டப்பேரவை கூட்டம் வரும் 21-ம் தேதிமுதல் முறையாக தொடங்க உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் வரும் 21 மற்றும் 22 ஆகியஇரு நாட்களும் ஆந்திர சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களும் பதவி ஏற்க உள்ளனர்.

மேலும், சபாநாயகராக அய்யண்ண பாத்ருடு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். துணை சபாநாயகர் பதவி பாஜகவுக்கு வழங்கப்படலாம் என கூறப் படுகிறது.

துணை முதல்வராக பொறுப்பு வகிக்கும் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் விஜயவாடாவில் தன்னுடைய புதிய அலுவலகத்தை அதிகாரிகளுடன் இணைந்து நேற்று பார்வையிட்டார்.

அந்த கட்டிடத்தின் மேல் மாடியில் அவருக்கு வீடும் கீழேதுணை முதல்வருக்கான அலுவலகமும் இருந்ததால், அதில் தங்க அவர் சம்மதம் தெரிவித்தார். இவர் அமராவதியில் துணைமுதல்வராக இன்று பதவி ஏற்க உள்ளார்.

இதனால், தலைமை செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்தை பவன் கல்யாண் நேற்று பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த சந்திரபாபு நாயுடுவையும் அவர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in