

புதுடெல்லி: டெல்லியில் நேற்று இரவு 7.15 மணிக்கு பிரதமராக மூன்றாவது முறை மோடி பதவி ஏற்றார்.அவருடன் புதிய அமைச்சரவைக்கான அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். பதவிஏற்பு முடிந்த பிறகு அமைச்சர்களுக்கு அமைச்சர் ஜே.பி.நட்டாவீட்டில் விருந்து ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
கோடை காலத்துக்கு ஏற்றஉணவுகள் தயார் செய்யப்பட்டிருந்தன. தொடக்கமாக 5 வகையான பழச்சாறுகள், பிரதான உணவாக ஜோத்புரி சப்ஸி, பருப்பு, தம் பிரியாணி பரிமாறப்பட்டன. வகை வகையான பஞ்சாபி உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
சிறு தானிய உணவுகளும், இனிப்புப் பிரியர்களுக்கென்று 8 வகையான இனிப்புகள் பரிமாறப்பட்டன.