பிரதமர் மோடிக்கு தேவகவுடா வாழ்த்து

பிரதமர் மோடிக்கு தேவகவுடா வாழ்த்து
Updated on
1 min read

பெங்களூரு: மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்ற மோடிக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் பிரதமரும் மஜத தேசிய தலைவருமான தேவகவுடா பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றியைப் பெற்று, மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கும் உங்களுக்கு (மோடி) என்னுடைய மனமார்ந்தவாழ்த்துகள். பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு எனக்குஅழைப்பு விடுத்தமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உடல் நிலை பாதிப்பின் காரண மாக பதவியேற்பு விழாவில் என்னால் பங்கேற்க முடியவில்லை.

உங்களின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் அமைச்சரவையில் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு வாய்ப்புஅளித்தமைக்கு மிக்க நன்றி. எங்களின் அமைச்சர் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார் என உறுதிஅளிக்கிறேன். தேசிய ஜனநாயககூட்டணி ஆட்சியின் முடிவுகளுக்கு மதசார்பற்ற ஜனதா தளம்தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தேவகவுடா கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in