

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பாஜகவின் அடுத்த தலைவராகிறார் எனவும், ஜே.பி.நட்டா மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் எனவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய பிரதேசத்தில் 16 ஆண்டுகளுக்கு மேலாக முதல்வராக இருந்தவர் சிவராஜ் சிங் சவுகான். சில மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் மோகன் யாதவ் புதிய முதல்வராக நியமிக்கப்பட்டார். சிவராஜ் சிங் சவுகான் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது.
விதிஷா தொகுதியில் போட்டியிட்ட சிவராஜ் சிங் சவுகான், 11,16,460 வாக்குகள் வெற்றி பெற்றார். இந்நிலையில் பாஜகவின் அடுத்த தேசிய தலைவராக சிவராஜ் சிங் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக் காலம் ஏற்கெனவே முடிந்து விட்டது. தேர்தலை முன்னிட்டு அவரது பதவிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. அவர் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.