Published : 07 Jun 2024 05:41 AM
Last Updated : 07 Jun 2024 05:41 AM
புதுடெல்லி: மக்களவை தேர்தலில் நேரடியாகவாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 65.79% என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தபால் வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்ட பிறகு இறுதி வாக்கு சதவீதம் தெரிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: நடந்து முடிந்த 18-வது மக்களவை தேர்தலில் தகுதி வாய்ந்த 96.88 கோடி வாக்காளர்களில் 64.2கோடி வாக்காளர்கள் தங்களதுவாக்கினை செலுத்தி உள்ளனர். அதிலும் நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று மின்னணுவாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்கு செலுத்தியவர்களின் எண்ணிக்கை 65.79% என்பது தெரியவந்துள்ளது. புள்ளி விவரங்களுடன் கூடிய முழுமையான அறிக்கைதபால் வாக்குகளின் எண்ணிக்கையும் மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்கள் வாரியாக பெறப்பட்டு கணக்கிடப்பட்ட பிறகு வெளியிடப்படும்.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மொத்தமிருந்த 91.20 கோடி வாக்காளர்களில் 61.5 சதவீதத்தினர் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT