ஹெலிகாப்டர் புறப்பட அனுமதி மறுப்பு: மோடி குற்றச்சாட்டு

ஹெலிகாப்டர் புறப்பட அனுமதி மறுப்பு: மோடி குற்றச்சாட்டு
Updated on
1 min read

தேர்தல் பிரச்சாரத்துக்கு புறப்பட வேண்டிய நேரத்தில் டெல்லி விமான நிலையத்தில் தனது ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பெரேலியில் முதல் முறையாக நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சார மேடைக்கு கால தாமதாக வந்த மோடி, "நீங்கள் அனைவரும் எனக்காக வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருகிறீர்கள். ஆனால் இந்த தாமதத்திற்கு நான் காரணம் அல்ல. டெல்லி விமான நிலைய அதிகாரிகள் எனது ஹெலிகாப்டர் புறப்பட அனுமதி மறுத்ததாலேயே இது நடந்தது" என்றார்.

மேலும், கால தாமதத்திற்கு வருத்தம் தெரிவித்ததோடு, மக்கள் காத்திருப்பு வீண் போகாது என்றும் கூறினார்.

பின்னர் கூட்டத்தில் பேசிய மோடி, காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வந்தால் மட்டுமே ஏழைகளின் நினைவு வருன் என விமர்சித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in