ஐமுகூ ஆட்சி மீது குவியும் புகார் கடிதங்கள்: நடவடிக்கை எடுக்க பிரதமர் முயற்சி

ஐமுகூ ஆட்சி மீது குவியும் புகார் கடிதங்கள்: நடவடிக்கை எடுக்க பிரதமர் முயற்சி
Updated on
1 min read

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது நடைபெற்ற ஊழல்கள் குறித்து பிரதமர் அலுவலகத்துக்கு பல்வேறு கடிதங்கள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுப்ப தற்கான முயற்சியில் பிரதமர் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, ‘தி இந்து’விடம் பிரதமர் அலுவலக வட்டாரம் கூறும்போது, “பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல், அவருக்கு பல அநாமதேய கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன. அதில் கடந்த ஆட்சியின்போது பல்வேறு துறைகளில் நடந்த ஊழல்கள் குறித்து ஆதாரங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆய்வு செய்து ஊழல் நடைபெற்றதை உறுதிப்ப டுத்துவதற்காக ஒரு குழுவை பிரதமர் மோடி அமைத்துள்ளார்.

இந்தக் கடிதங்கள் பெரும்பா லும் சம்மந்தப்பட்ட துறைகளில் பணியாற்றிய அதிகாரி களிடமிருந்து வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதேநேரம், இதை அனுப்புபவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் அதில் உள்ள தகவல்களை மட்டும் உறுதி செய்யும்படி பிரதமர் உத்தர விட்டுள்ளார்” என தெரிவித்தனர்.

இஸ்ரேல் நிறுவனத்துடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு போட்ட ஒப்பந்தம் பற்றி ஐந்துக்கும் அதிகமான கடிதங்கள் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் பல்வேறு ஆதாரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளதால் அதன் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

இதுபோல், வேறு பல துறைகள் குறித்தும் புகார் கடிதங்கள் வந்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in