

லக்னோ: கடந்த 2014 மக்களவைத் தேர்தலில்உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு பெரிய அளவில் சறுக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி26 இடங்களை குறைவாகப் பெற்றுள்ளது.
உத்தரபிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள் ளன. கடந்த 2014, 2019-ல் நடை பெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக இங்கு கணிசமான இடங் களைப் பெற்றது. இதனால் மத்தி யில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எளிதாக ஆட்சி அமைத்தது. உ.பி.யில் கணிசமான தொகுதி களை பாஜக பெற்றதால் கட்சிக்கு மிகப்பெரிய உத்வேகம் ஏற் பட்டது. கடந்த 2019-ம் ஆண்டுநடைபெற்ற தேர்தலின்போது மொத்த முள்ள 80 இடங்களில் பாஜக கூட்டணி 62 இடங்களைக் கைப்பற்றியது.
ஆனால் தற்போது நடைபெற்ற இந்தத் தேர்தலில் பாஜக கூட்ட ணிக்கு மிகப்பெரிய சறுக்கல் ஏற்பட் டுள்ளது. கூட்டணிக்கு 36 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இது கடந்த தேர்தலை விட 26 இடங்கள் குறைவு ஆகும்.
அதே நேரத்தில் கடந்த 2019 தேர்தலில் வெறும் 5 இடங்களைப் பெற்ற அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி,இந்த தேர்தலில் 37 இடங்களைப்பெற்று மிகப்பெரிய சக்தியாக உருவாகியுள்ளது.
மாயாவதி படுதோல்வி: கடந்த 2019-ல் மாயாவதி தலை மையிலான பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களில் வெற்றிபெற்றது. ஆனால் இந்த முறை அந்தக் கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
அதேபோல் கடந்த தேர்தலின் போது ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்ற காங் கிரஸ் கட்சி தற்போது 6 இடங்களில் வென்றுள்ளது.
சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியின் அதிரடியானபிரச்சாரத்தால் பாஜகவுக்கு உ.பி. மாநிலத்தில் அதிகளவில் தோல்வி ஏற்பட்டுள்ளதாக தேர்தல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பின்மை, ராணுவத் தில் அக்னிவீர் திட்டம், ஓபிசி இடஒதுக்கீடு போன்ற பிரச்சினை கள் குறித்து பிரச்சாரத்தில் சமாஜ்வாதியும், காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் முக்கியமான விவாதமாக வைத்தனர். இதனால் 2014-ல்71 இடங்களிலும், 2019-ல் 62 இடங்களிலும் வெற்றி பெற்ற பாஜக கூட்டணியால் இம்முறை 36 இடங்களோடு நிற்க வேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது.