Last Updated : 05 Jun, 2024 06:07 AM

 

Published : 05 Jun 2024 06:07 AM
Last Updated : 05 Jun 2024 06:07 AM

பிரஜ்வல் தோல்விக்கு காரணமான ஆபாச வீடியோ விவகாரம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மக்களவைத் தொகுதியானது, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கோட்டையாக திகழ்கிறது. முன்னாள் பிரதமர் தேவகவுடா இந்ததொகுதியில் 1991 முதல் 2014 வரை6 முறை தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறார்.

கடந்த 2019-ம் ஆண்டு இந்த தொகுதியை அவர், தனது பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு விட்டுக்கொடுத்தார். தேவகவுடாவும், குமாரசாமியும் வேறு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர். ஆனால் பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் தொகுதியில் சுமார் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாச‌த்தில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து இந்த தேர்தலில் பாஜக கூட்டணியின் சார்பில் மீண்டும் அவர், அதே தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரம் உச்சத்தை எட்டிய நிலையில், பிரஜ்வல் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3,000 ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ் வெளியானது.

இதனால் வெளிநாட்டுக்கு தப்பியோடியவரை போலீஸார் கடந்த31-ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயஸ் படேலிடம் 40,000வாக்குகள் வித்தியாசத்தில் பிரஜ்வல் தோல்வி அடைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x