Last Updated : 06 Apr, 2018 08:11 AM

 

Published : 06 Apr 2018 08:11 AM
Last Updated : 06 Apr 2018 08:11 AM

முதல்வர் சித்தராமையாவுடன் நடிகர் சுதீப் திடீர் சந்திப்பு: அரசியலில் ஈடுபடுவது குறித்து ஆலோசனை

கர்நாடகாவில் மே 12-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் ஆளும் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கன்னடம், தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகர் சுதீப்பை தங்களது கட்சிக்கு இழுக்க காங்கிரஸ், பாஜக, மஜத ஆகியவை முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. நடிகர் சுதீப் கடந்த சில தினங்களுக்கு முன்பு மஜதவின் முன்னாள் முதல்வர் குமாரசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை பெங்களூருவில் நேற்று சுதீப் சந்தித்தார். அப்போது சட்டப்பேரவை தேர்தல் குறித்தும், அரசியலில் ஈடுபடுவது குறித்தும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x