Published : 26 May 2024 09:29 AM
Last Updated : 26 May 2024 09:29 AM

ஓட்டு வங்கிக்காக பணியாற்றுகிறது இண்டியா கூட்டணி: பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிஹரார் மாநிலத்தின் பாடலிபுத்ரா மக்கள்வை தொகுதியில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பாஜக எம்.பி ராம் கிர்பல் யாதவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: சமூக நீதி போராட்டத்துக்கான புதிய வழியை காட்டிய மாநிலம் பிஹார். எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவினரின் உரிமைகளை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கும் இண்டியா கூட்டணியின் திட்டத்தை முறியடிப்பேன் என நான் இங்கிருந்து கூற விரும்புகிறேன். அவர்கள் அடிமையாக இருந்து ஓட்டு வங்கியை மகிழ்விக்க முஜ்ரா நடனம் கூட ஆடலாம். ஓட்டு ஜிகாத்தில் ஈடுபடு பவர்களின் ஆதரவை நம்பி எதிர்கட்சிகளின் கூட்டணி உள்ளது. ஓபிசி பட்டியலில் பல முஸ்லிம் பிரிவினரை சேர்க்கும் மேற்கு வங்க அரசின் முடிவை கொல்கத்தா உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

எல்இடி விளக்கு யுகத்தில் சிலர் அகல் விளக்குடன் (ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் சின்னம்) சுற்றுகின்றனர். அது அவர்கள் வீட்டுக்கு மட்டும்தான் வெளிச்சம் கொடுக்கிறது. அவர்கள் ஒட்டுமொத்த பிஹாரையும் இருளில் வைத்துள்ளனர். உலக அரங்கில் இந்தியாவின் வல்லமைக்கு நீதி பெற்றுத் தரக்கூடிய பிரதமர் தான் இந்தியாவுக்கு தேவை. ஆனால், உயர் பதவிக்கு மியூசிக்கல் சேர் விளையாடும் நோக்கத்துடன் இண்டியா கூட்டணி இருப்பதுபோல் தெரிகிறது. இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லாம் குறுகிய காலம் பிரதமர் பதவியில் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

எனது அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி பிஹாரில் விரைவான முன்னேற்றத்தை உறுதி செய்யும். அனைத்து இடங்களில் சிறப்பான மின் விநியோகம், தரமான வீடுகள் உருவாக்கப்படும். மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் அளிக்கும் தீர்மானம் கூட முந்தைய அரசுகளிடம் இல்லை. தேர்தல் முடிவதற்கு முன்பாகவே, கருத்து கணிப்பு முடிகளை வைத்து, இண்டியா கூட்டணி விமர்சனம் செய்து வருகிறது. விரைவில் அவர்கள் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரம் குறித்து மீண்டும் புலம்புவர். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x