Published : 29 Apr 2018 08:34 AM
Last Updated : 29 Apr 2018 08:34 AM

போராட்டத்தில் பங்கேற்க சென்றபோது ஸ்ரீநகரில் யாசின் மாலிக் கைது

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எப்) தலைவர் யாசின் மாலிக் நேற்று ஸ்ரீநகரில் பிரிவினைவாதிகளின் போராட்டம் ஒன்றில் பங்கேற்கச் செல்லும்போது கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து ஜேகேஎல்எப் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “பிரிவினைவாதிகள் கூட்டமைப்பு (ஜேஆர்எல்) அழைப்பு விடுத்திருந்த போராட்டம் ஒன்றில் பங்கேற்க, ஸ்ரீநகர் முதுநகர் பகுதியில் உள்ள நவ்ஹட்டாவுக்கு யாசின் மாலிக் செல்லும்போது, போலீஸார் அவரது வாகனத்தை நிறுத்தி கைது செய்தனர்” என்றார்.

ஹுரியத் மாநாடு தலைவர் மிர்வைஸ் உமர் ஃபரூக் தனது ட்விட்டர் பக்கத்தில், யாசின் மாலிக் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

“காஷ்மீரில் மாணவர்கள் மீதான பலப்பிரயோகம், இளைஞர்கள் கொல்லப்படுவது, தலைவர்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்படுவதற்கு எதிரான அமைதிவழி போராட்டத்தில் பங்கேற்கச் செல்லும் வழியில் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் போலீஸ் தாக்குதல், பலப்பிரயோகம் மற்றும் கைது நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று உமர் ஃபரூக் கூறியுள்ளார். -ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x