

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காந்தி பாம் கடைசி நேரத்தில் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றார். பின்னர் அவர் பாஜகவில் சேர்ந்தார். அந்த தொகுதியில் இன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
இதனிடையே, பேட்மா நகரில் பாஜக சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மோகன் யாதவ் பேசும்போது, "இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தனது மனுவை வாபஸ் பெற்று விட்டதற்காக காங்கிரஸ் கட்சி பாஜகவை குறை கூறுகிறது.
இதில் எங்கள் தவறு என்ன இருக்கிறது? திருமண விருந்துக்கு ஊரில் உள்ள அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுக்கின்றனர். ஆனால் திருமணத்துக்கு முன்பு மாப்பிள்ளை ஓடிவிட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்" என்றார்.