பத்மஸ்ரீ விருது பெற்ற பழங்குடியின பெண்ணின் பாதம் தொட்டு ஆசிபெற்ற பிரதமர் மோடி

பத்மஸ்ரீ விருது பெற்ற பழங்குடியின பெண்ணின் பாதம் தொட்டு ஆசிபெற்ற பிரதமர் மோடி
Updated on
1 min read

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்ற பிரதமர் மோடி, கந்தமாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அங்கு பத்மஸ்ரீ விருது பெற்ற 80 வயதான பழங்குடியின பெண் கவிஞரும், சமூக ஆர்வலருமான பூர்ணமாசியை பிரதமர் மோடி சந்தித்தார். இவர் குயி, ஒடியா, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் 50,000-க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களை பாடியுள்ளார். அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்த பிரதமர் மோடி, அவரது பாதம் தொட்டு வணங்கி ஆசி பெற்றார்.

பின்பு பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: வரும் தேர்தலில் தே.ஜ. கூட்டணிக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கும். தேர்தலுக்கு பின்பு ஒடிசாவில் இரட்டை இன்ஜின் அரசு அமைந்து மத்திய-மாநில தலைவர்கள் இடையேயான கூட்டு வலுப்பெறும். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு ஒடிசாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் தலைநகரங்களின் பெயர்களை குறிப்பு ஏதும் இல்லாமல் கூற முடியுமா? காங்கிரஸ் மக்கள் இடையே அச்சமூட்டும் யுக்திகளை பின்பற்றி வருகிறது. பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்களை வாங்க உலக நாடுகள் ஆர்வம் காட்டவில்லை என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in