அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் - பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பாராட்டு

அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் - பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பாராட்டு
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஜாமீனில் அவர் நேற்று முன்தினம் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இதற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பவாத் சவுத்ரி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பவாத் சவுத்ரி கூறியிருப்பதாவது: திஹார் சிறையிலிருந்து ஜாமீனில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வெளியே வந்துள்ளார். மற்றுமொரு போட்டியில் மோடிஜி தோல்வியைச் சந்தித்துள்ளார். இந்தியாவுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.

மற்றொரு எக்ஸ் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானில் சட்டம் -ஒழுங்கு நிலை சரியில்லை. வழக்கறிஞர் சங்கங்கள், ஊடக அமைப்புகள், மனிதஉரிமை அமைப்புகள் முடங்கியுள்ளன. சட்டத்துறையின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியையும் அவர் பாராட்டியுள்ளார். ராகுல் காந்தியைப் பாராட்டியுள்ள நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த தலைவர்கள் சிலர், பவாத் சவுத்ரியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in