மோடி அலையை மட்டுமே நம்பி இருக்க வேண்டாம்: பாஜக தொண்டர்களுக்கு கட்கரி அறிவுரை

மோடி அலையை மட்டுமே நம்பி இருக்க வேண்டாம்: பாஜக தொண்டர்களுக்கு கட்கரி அறிவுரை
Updated on
1 min read

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல்களில், பாஜக தொண்டர்கள் மோடி அலையை மட்டுமே நம்பி மெத்தனமான இருக்கக் கூடாது என மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி கேட்டுக் கொண்டுள்ளார்.

மகாராஷ்டிரம் உள்ளிட்ட சில மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று பாஜக பலத்தை அதிகரிக்க அக்கட்சி வியூகம் வகுத்துள்ளது.

இந்நிலையில், மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றியை மோடி அலை பெற்றுத்தந்ததால் தொண்டர்கள் அதை மட்டுமே நம்பி தேர்தல் களம் காணக்கூடாது என நிதின் கட்கரி அறிவுரை கூறியுள்ளார். புனேவில் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தொண்டர்கள் அடிதட்டு மக்களிடம் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க வேண்டும். வாக்காளர்களின் நம்பிக்கையை சம்பாதிக்க வேண்டும். அப்போதுதான் தேர்தலில் வெற்றிபெற முடியும் என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in