

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
அவரது வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 3 பெண்கள் பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்தனர்.
இதேபோல தேவகவுடாவின் மூத்த மகனும் மஜத எம்எல்ஏவு மான ரேவண்ணா (66) மீதும் வீட்டு பணிப்பெண் பாலியல் புகார்தெரிவித்தார். இந்த விவகாரத்தில் ரேவண்ணாவும் அவரதுஉதவியாளர் சதீஷ் பாவண்ணாவும் கைது செய்யப்பட்டனர்.
ஜெர்மனிக்கு தப்பியோடிய பிரஜ்வலை கைது செய்ய தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே முன்னாள் முதல்வரும் மஜத மாநில தலைவருமான குமாரசாமி நேற்று பெங்களூருவில் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து மனு அளித்தார்.
அதில், ‘‘பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவினர் முறையாக விசாரிக்க வில்லை. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்'' என கோரி யுள்ளார்.