எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இருவர் பலி; 7 பேர் படுகாயம்- பீதியில் கிராமவாசிகள் வெளியேறினர்

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இருவர் பலி; 7 பேர் படுகாயம்- பீதியில் கிராமவாசிகள் வெளியேறினர்
Updated on
1 min read

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லையில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் எல்லையோர கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் உள்பட இரண்டு பேர் பலியாகினர். 13 பேர் படுகாயமடைந்தனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கடும் தாக்குதல்ல் ஈடுபட்டனர்.

இதில், முகமது அக்ரம், அவரது மகன் அஸ்லாம் (13) ஆகிய இருவரும் பலியாகினர். அக்ரமின் மனைவி, 3 குழந்தைகள், எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் ஜம்மு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக எல்லை பாதுகாப்புப் படை உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்: அர்னியா துணை செக்டாரில், சர்வதேச எல்லையில் 17 அவுட்போஸ்ட்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

வெளியேறும் கிராமவாசிகள்:

பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், எல்லையோரத்தில் உள்ள 3 கிராமங்களில் இருந்து 2000 கிராமவாசிகள் வெளியேறியுள்ளனர். உயிரை காப்பாற்றிக் கொள்ள உடைமைகளையும், கால்நடைகளையும் விடுத்து தப்பிச் சென்றனர்.

அவசரகதியில் கிராமங்களை விட்டு வெளியேறிய மக்களை அரசு பள்ளிக்கூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in