

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாஷித்தை, சந்தித்து பேசிய காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானி, காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை அல்ல, அவை சர்வதேச பிரச்சினை என்று கூறினார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே ஆன வெளியுறவுத்துறை செயலாளர்கள் மேற்கொள்ள இருந்த சந்திப்பு முறிந்தது. ஆனால் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரை, காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்ததால், இவர்களின் சந்திப்பு இரண்டு நாட்களாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், இன்று பாகிஸ்தான் தூதர் அப்துல் பாஷித், காஷ்மீர் பிரிவினைவாத இயக்கமான ஹூரியத் மாநாட்டு கட்சி தலைவர் சையது அலி ஷா கிலானி, பாகிஸ்தான் தூதர் அப்துல் பாஷித்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 2- வது நாளாக பாகிஸ்தான் தூதர் நடத்தும் சந்திப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
இந்த சந்திப்பை கண்டித்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு சில இயக்கத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு சற்று பரபரப்பு நிலவியதை தொடர்ந்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை அல்ல, காஷ்மீர் ஒரு சர்வதேச பிரச்சினை.
காஷ்மீர், இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்று கூறுபவர்கள், காஷ்மீர் பிரிவினை சாத்தியமில்லை என்று கூறுவார்கள். ஆனால் இவை சர்வதே பிரச்சினை. இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்" என்றார்.