ராமர் கோயில் தீர்ப்பை எதிர்க்கும் திட்டமில்லை: காங். திட்டவட்டம்

ராமர் கோயில் தீர்ப்பை எதிர்க்கும் திட்டமில்லை: காங். திட்டவட்டம்
Updated on
1 min read

ராமர் கோயில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் திட்டமில்லை என காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் நடந்த பேரணியில் பிரதமர் மோடி பேசுகையில், அயோத்தி தீர்ப்பை ரத்து செய்ய ராகுல் காந்தி முயல்கிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதற்கு பதிளிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளதாவது: ராமர் கோயில் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது. மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அதை ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை.

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை. முதலில் இந்த விஷயத்தில் நீதிமன்றத்தின் தலையீடு குறித்து முதலில் கேள்வி எழுப்பியது பாஜகதான். இவ்வாறு காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “பிரதமர் பொய் என்ற தொற்றுநோயை பரப்பிவிடுகிறார். அவரது முழு அரசியல் வாழ்க்கையும் அசத்யமேவ ஜெயதேயில் தொகுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in