பிரதமருக்கு ரேடியோவை பரிசாக அனுப்பிய ஒய்.எஸ்.ஷர்மிளா

பிரதமருக்கு ரேடியோவை பரிசாக அனுப்பிய ஒய்.எஸ்.ஷர்மிளா

Published on

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கடப்பா மக்களவைத் தொகுதி வேட்பாளருமான ஒய்.எஸ். ஷர்மிளா நேற்று கடப்பாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடப்பா மக்களவைத் தொகுதியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அவினாஷ் ரெட்டி தேர்தல் பயம் காரணமாக பாஸ்போர்ட் எல்லாம் தயார் நிலையில் வைத்துள்ளார்.

விரைவில் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை அவர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் ஒரு குற்றவாளி வெற்றி பெற்றதாக அர்த்தம்.

கடப்பாவில் அவினாஷ் ரெட்டி ‘சிங்கிள் பிளேயர்’ என ஜெகன்மோகன் ரெட்டியின் மனைவி பாரதி ரெட்டி கூறுகிறார். இவர்களுக்கு தாங்கள் மட்டுமே ஆட்சி நடத்த வேண்டும், எதிர்த்து பேசுவோர் யாராக இருந்தாலும் அவர்களை வெட்டி சாய்த்து விட வேண்டும்.

இதுதான் பாரதியின் திட்டம் போலும். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திர மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளார். ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள ஒரு வாக்குறுதியை கூட அவர் நிறைவேற்றவில்லை.

இதற்காக அவர் ஆந்திர மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆந்திர மக்களின் மனதின் குரலை கேட்க அவருக்கு தனிப்பட்ட முறையில் ஒரு ரேடியோவை பரிசாக அனுப்புகிறேன். இவ்வாறு ஷர்மிளா ஆவேசமாக பேசினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in