Published : 18 Apr 2018 08:19 AM
Last Updated : 18 Apr 2018 08:19 AM

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவ வலி; உ.பி.யில் மகப்பேறு வார்டாக மாறிய ரயில் பெட்டி

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து ரயில் பெட்டியை மகப்பேறு வார்டாக மாற்றினர். பின்னர் அந்த பெண்ணுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹரி ஓம். இவரது மனைவி சுமன்தேவி (30). சுமன் தேவி தனது பிரசவத்துக்காக ஜன் நாயக் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோரக்பூருக்கு தனது கணவருடன் நேற்று முன்தினம் இரவு சென்றுகொண்டிருந்தார்.

ரயில் சீதாப்பூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை வந்தடைந்ததும் அவருக்கு பிரசவ வலி அதிகமானது.

இதையடுத்து ஹரி ஓம், கோரக்பூர் ரயில்வே அதிகாரிகளைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அங்குள்ள அதிகாரிகள் டாக்டர் ஒருவரை அழைத்து வந்தனர். பின்னர் சுமன்தேவி இருந்த ரயில்வே பெட்டியையே மகப்பேறு வார்டாக மாற்றினர். டாக்டர், பெண் கான்ஸ்டபிள், ரயிலில் இருந்த பெண்களின் உதவியுடன் சுமன்தேவிக்கு பிரசவம் நடைபெற்றது.

அப்போது அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து ஒரு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டு சீதாப்பூரிலுள்ள மாவட்ட மருத்துவமனைக்கு சுமன்தேவி, குழந்தையுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

மருத்துவமனையில் தாயும் சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

தகுந்த நேரத்தில் உதவி செய்த சீதாப்பூர் ரயில் நிலைய அதிகாரி சுரேஷ் யாதவுக்கு, ஹரி ஓம் தம்பதியும் சக பயணிகளும் பாராட்டு தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் ரயில் ஒரு மணி நேரம் தாமதமானது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x