மக்களவைத் தேர்தல் | இரவு 8 மணி நிலவரப்படி 61.45% வாக்குப்பதிவு - அசாமில் அதிகம்

மக்களவைத் தேர்தல் | இரவு 8 மணி நிலவரப்படி 61.45% வாக்குப்பதிவு - அசாமில் அதிகம்
Updated on
1 min read

புதுடெல்லி: மக்களவை 3 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், இரவு 8 மணி நிலவரப்படி, 61.45 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக அசாமில் 75.26 சதவீதமும், குறைந்தபட்சமாக மகாராஷ்டிராவில் 54.77 சதவீதமும் வாக்குப்பதிவாகியுள்ளது.

மாநில வாரியாக வாக்குப்பதிவு

மத்தியப் பிரதேசம் 63.09%
மகாராஷ்டிரா 54.77%
அசாம் 75.26%
பிஹார் 56.55%
சத்தீஸ்கர் 66.99%
கோவா 74.27%
குஜராத் 56.76%
கர்நாடகா 67.76%
உ.பி. 57.34%

தாதர் அண்ட் நாகர் ஹவேலி, டாமன் டியு 65.23%

குறைந்த வாக்குப்பதிவு: கடந்த 2019 மக்களவை தேர்தலை ஒப்பிடுகையில் தற்போது நடந்த 3ம் கட்ட தேர்தலில் 5 சதவீத வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளன.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 102 தொகுதிகள், ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மூன்றாவது கட்டத்தில் 94 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனிடையே இரண்டாவது கட்ட தேர்தலில் மத்திய பிரதேசத்தின் பேதுல் தொகுதி பகுஜன் சமாஜ்வேட்பாளர் அசோக் பலாவி உயிரிழந்ததால் அந்த தொகுதிக்கான தேர்தல் 3-வது கட்டத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி 3-வது கட்டத்தில் ஒரு தொகுதி அதிகரித்து 95 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. மேற்குவங்கத்தில் மட்டும் ஓரிடத்தில் வன்முறைச் சம்பவம் பதிவாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in