50% இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்படும்: ராகுல் தேர்தல் வாக்குறுதி

50% இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்படும்: ராகுல் தேர்தல் வாக்குறுதி
Updated on
1 min read

போபால்: மத்திய பிரதேசம் ரத்லமில் நேற்று நடைபெற்ற தேர்தல் பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் பேசியதாவது: சாதி அடிப்படையில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் விதித்துள்ள 50 சதவீத உச்ச வரம்பை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் ஆதிவாசிகளுக்கு எவ்வளவு இடஒதுக்கீடு தேவையோ அதனை வழங்குவோம்.

பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் இணைந்து அரசியல் சாசன அமைப்பை மாற்ற துடிக்கின்றன. எனவே, இந்த தேர்தல் நமது அரசியல் சாசனத்தை காப்பதற்காகவே நடத்தப்படும் போராகும். இந்த அரசியலமைப்புதான் நமக்கு ஜல் (நீர்), ஜங்கல் (காடு), ஜமீன் (நிலம்) ஆகியவற்றுக்கான உரிமைகளை வழங்கியுள்ளது.

ஆனால், நரேந்திர மோடி அவற்றை அகற்ற வேண்டும் என விரும்புகிறார். அதற்கு முழு அதிகாரம் வேண்டும் என்பதற்காகவே இந்த தேர்தலில் அவர் வெற்றி பெற விரும்புகிறார். இட ஒதுக்கீட்டையும் நீக்குவதாக சொல்கிறார்கள் பாஜகவினர். ஆனால், காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 50 சதவீத வரம்பை தாண்டி இடஒதுக்கீட்டை அதிகரிப்போம். இவ்வாறு ராகுல் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in