Published : 07 May 2024 08:13 AM
Last Updated : 07 May 2024 08:13 AM

பக்க விளைவு தொடர்பான மனு - கோவிஷீல்ட் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

புதுடெல்லி: கரோனா காலகட்ட நெருக்கடி யின்போது பிரிட்டனைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழகம் இணைந்து கோவிட்-19 பாதிப்புக்கு தடுப்பூசியை உருவாக்கின. இந்தியாவில் இந்த தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து கரோனாவுக்கான தடுப்பூசியாக கோவிஷீல்ட் என்ற பெயரில் விற்பனை செய்தது. இந்தியாவில் கோடிக்கணக்கானோருக்கு அந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டசிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 100 மில்லியன் வரை இழப்பீடு கோரப்பட்ட 50 வழக்குகள் தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.

அண்மையில் இது தொடர்பான வழக்கில் பதிலளித்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் கோவிஷீல்ட்தடுப்பூசி மிக அரிதான சந்தர்ப்பங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என ஒப்புக் கொண்டது. இது, அந்த தடுப்பூசியை செலுத்திக்கொண்ட வர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கோவிஷீல்ட் தடுப்பூசி தொடர்பான பக்கவிளைவுகள் குறித்த விசாரணையை இந்தியாவில் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்கத் தொடங்கின. இதனை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.

கோவிஷீல்ட் பக்க விளைவு மனு தொடர்பான விசாரணையை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இருப்பினும், இந்த பிரச்சினையின் தீவிரத்தை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஒப்புக் கொண் டார். ஆனால், விசாரணை எப்போது நடைபெறும் என்று அறிவிக்கப்படவில்லை.

கோவிஷீல்ட் தடுப்பூசியால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் குறித்து விசாரிக்க நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் அதனை ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கண்காணிக்க வேண்டும் என்றும் அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்தியதால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் அந்த மனுவில் அடக்கம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x