Last Updated : 07 Apr, 2018 11:33 AM

 

Published : 07 Apr 2018 11:33 AM
Last Updated : 07 Apr 2018 11:33 AM

‘‘நடன நிகழ்ச்சிக்கு ஐபிஎல்லைவிட சிறந்த இடம் இல்லை’’ - தமன்னா உற்சாகம்

நடன நிகழ்ச்சிகள் வழங்க ஐபிஎல்லைவிட சிறந்த இடமில்லை என்று தொடக்க விழாவில் பங்கேற்பதைப் பற்றி தமன்னா உற்சாகம் கொப்பளிக்க கூறியுள்ளார்.

இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ள தொடக்க விழாவுக்கான இறுதி ஒத்திகையில் ஈடுபடுவதற்கு முன் நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியது:

''நிறைய விருதுவழங்கும் விழாக்களில் பங்கேற்று எனது நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளேன்.. இதற்காக பல சுற்றுப்பயணங்களும் மேற்கொண்டுள்ளேன். ஆனால் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதல் முறை.

இதற்குமுன் இப்படி நான் எப்போதும் விளையாட்டு நிகழ்ச்சி தொடர்பான விழாக்களில் பங்கேற்றது இல்லை. விளையாட்டுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் நீங்கள் ஏறும்போது ஒருவித நடுக்கமும் கூடவே உற்சாகமும் தொற்றிக்கொள்ளும் இல்லையா அத்தகைய பரவசம் இப்போது எனக்கு.

ஸ்டேடியத்தில் ரசிகர்களுக்கு உற்சாக உணர்வுகளைத் தட்டியெழுப்பும் ஒரு நிகழ்ச்சி அளிப்பவராக பங்கேற்பது என்பது மிகவும் மாறுபட்டது.

ஐபிஎல் போன்று உற்சாகம் தரும் வேறெந்த விழாக்களிலும் நாங்க பங்கேற்றதில்லை என்பதாலேயே நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தொடக்க நாள் இரவில் நாம் அனைவரும் கிரிக்கெட்டைக் கொண்டாடுவோம்.

மும்பை, சென்னை, ஹைதராபாத் ஆகிய ஊர்களை எனது சொந்த ஊராகத்தான் நினைக்கிறேன். இந்த அனைத்து நகரங்களிலும் நான் இருந்திருக்கிறேன்.

தற்போது, இதில், என்னுடைய ஆடல் பாடல் நிகழ்ச்சி கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் நான்கு பாடல்கள் நிகழ்த்தப்பட உள்ளன. எனவே இது இந்தியா முழுவதும் வலம் வரப் போகிறது'' என்றார்.

எந்த அணிக்கு உங்கள் ஆதரவு என்று கேட்டபோது, ''சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆடுகிறது. இதில் பங்கேற்கும் தோனிக்கு நான் மிகப்பெரிய ரசிகை. அதனால் அவர் விளையாடப் போவதை நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்'' என்றார் மிகவும் ஆர்வமாக.

இன்று நடைபெற உள்ள ஐபில் தொடக்க விழாவில் தமன்னா, ஹ்ருத்திக் ரோஷன், ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் வருண் தவான் ஆகியோரும் இந்த தொடக்கநாள் விழாவில் பங்கேற்று ரசிகர்களை மகிழ்வித்து உற்சாகப்படுத்த இருக்கிறார்கள்.

தமன்னா தற்போது கங்கணா ரனாவத்தின் 'குயின்' ரீமேக் படமான 'குயின் ஒன்ஸ் எகெய்ன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் நீலகண்டா இயக்கி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x