ஜஸ்வந்த் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

ஜஸ்வந்த் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
Updated on
1 min read

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயிர்காக்கும் கருவிகளின் உதவி யுடன் ஜஸ்வந்த் சிங்குக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நரம்பியல் சிறப்பு நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். 24 மணி நேரமும் அவரது உடல் நிலை கண்காணிக்கப்படுகிறது. அவர் கோமாவில் இருந்து இன்னமும் மீளவில்லை” என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள வீட்டில் வியாழக்கிழமை இரவு வழுக்கி விழுந்த ஜஸ்வந்த் சிங்குக்கு தலை யில் பலத்த காயம் ஏற்பட்டது. மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அவர் உடனடியாக அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார்.

அவர் குணமடைய வேண்டி அவரது சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் சனிக்கிழமை சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மருத்துவ மனைக்கு சென்று அவரது உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in