Published : 19 Apr 2018 04:43 PM
Last Updated : 19 Apr 2018 04:43 PM

காஷ்மீர் சிறுமி பலாத்கார கொலை சம்பவம் குறித்து பேசுவதே பயங்கரமானது: அமிதாப் பச்சன்

எனக்கு இதைப் பற்றிப் பேசுவதே வெறுப்பாக இருக்கிறது என்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட கத்துவா சிறுமி குறித்த கேள்விக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பதிலளித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா மாவட்டம், ரசானா என்ற கிராமத்தில் பக்கர்வால் என்ற நாடோடி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த ஜனவரி 10-ம் தேதி காணாமல் போனார். இந்நிலையில் ஒரு வாரத்துக்குப் பிறகு அச்சிறுமி அதேபகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பிரேதப் பரிசோதனையில் சிறுமி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று இந்தியா முழுவதும் ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் "102 Not Out" படம் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனிடம் கத்துவா சிறுமி பலாத்காரம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது இதற்கு பதிலளித்த அமிதாப்’ “ இதைப் பற்றிப் பேசவே எனக்கு வெறுப்பாக இருக்கிறது. இதுபற்றிப் பேசுவது கூட பயங்கரமானது. இந்தச் சிக்கலை எழுப்பாதீர்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x